தலயின் விசுவாசம் படத்துடன் வீரம் பட கனெக்ஷன்..!! உத்தியோகப்பூர்வ தகவல்..!!!


சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடிக்கவிருக்கும் படம் ‘விசுவாசம்’. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் கதாநாயகி, இசையமைப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில், ‘விசுவாசம்’ படத்தில் மலையாள திரையுலகின் முன்னணி ஹீரோ நிவின் பாலி நடிக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் 58-வது படமான ‘விசுவாசம்’ படத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். சில வருடங்களாக அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்தான் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அவரது ஸ்டைலை மாற்றி யூத்தாக நடிக்க வைக்க இருக்கிறாராம் சிவா.


சமீபகாலமாக நிவின் பாலி, துல்கர் சல்மான், ஃபகத் பாசில் உள்ளிட்ட மலையாள நடிகர்கள் தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பெரிய படங்களில்தான் நடிப்பேன் என்று சொல்லாமல், வித்தியாசமான கேரக்டர்கள் கிடைத்தாலும் தயங்காமல் நடிக்கிறார்கள்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக இருந்தாலும், நிவின் பாலி உள்ளிட்டோர் தமிழ் படங்களில் நடிப்பதற்குக் காரணம் கோலிவுட் பெரிய மார்க்கெட் கொண்டது. அதுபோக, நிவின் பாலி, துல்கர், ஃபகத் பாசில் ஆகியோர் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகவும் உள்ளனர். அதனால், நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிக்கும் ‘வேலைக்காரன்’ படத்தில் ஃபகத் பாசில் நடிக்கும் நிலையில், ‘ரிச்சி’ படத்தில் நடித்து வருகிறார் நிவின்பாலி. நிவின் பாலி தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கவிருப்பதாகக் கூறப்பட்டது.


இந்நிலையில், சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

அவரது நடிப்பில் கடைசியாக வந்த படம். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் மிகவும் குளிர்ந்த பகுதியில் எடுக்கப்பட்டிருந்தது. சரி அந்த படம் இருக்கட்டும் விசுவாசம் படத்திற்கு வருவோம்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. இதற்கு நடுவில் படக்குழுவும் படத்தில் நடிக்கப்போகும் பிரபலங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வீரம் படத்தில் நான்கு தம்பிகளில் ஒருவராக நடித்த பாலா தற்போது விசுவாசம் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவலை நடிகர் பாலா அவர்களே மலையாள சினிமாவின் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!