பிகில் இடைவேளை காட்சி எப்படி இருக்கும் தெரியுமா? முத்துராஜ் ஓபன் டோக்

தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் மிகப்பெரும் வரவேற்பில் உள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் சமீபத்தில் ஒரு பேட்டியில் பிகில் குறித்து மனம் திறந்துள்ளார்.

இதில் குறிப்பாக பிகில் இடைவேளை காட்சி குறித்து கேட்டப்போது ‘பிகில் இடைவேளைக்காட்சி செம்ம மாஸாக இருக்கும்.தெறி, மெர்சலை காட்டிலும் செம்ம மாஸ் இருக்கும், அதிலும் அப்பா விஜய் எண்ட்ரீ வேற வெவல் மாஸ்’ என கூறியுள்ளார்.

முத்துராஜ் தான் அட்லீ இயக்கிய அனைத்து படங்களுக்கும் கலை இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது, அதோடு இவர் தெறி படத்திலும் ஒரு காட்சியில் நடித்தவர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!