அஜித்தின் “விசுவாசம்” முதற்கட்ட படப்பிடிப்பு..!!! எங்கு தெரியுமா..?


இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்த படம் விவேகம் . இந்த படம் வெளியாகி பல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் விவேகம் படத்திற்கு பிறகு புதிய படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர்.

அவர்களுக்கு அதிரடி ஷாக் கொடுக்கும் வகையில் படக்குழு எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் சிவா-அஜித் இணையும் 4வது படத்தின் பெயர் விசுவாசம் என்று அறிவித்தனர்.


படத்தின் நாயகி மற்றும் இசையமைப்பாளர் பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை ஜனவரி மாதம் படக்குழு தொடங்க முடிவு செய்துள்ளனர்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கி, சென்னை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நடைபெற இருக்கிறதாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!