தெலுங்கு பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற கமல்..!! என்ன காரணம் தெரியுமா..?


கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது அனைவரும் அறிந்ததே. இந்த நிகழ்ச்சி மூலம் தன் அரசியல் கருத்துக்களையும் கமல் பதிவு செய்தார்.

இது நல்ல ரீச் ஆக இரண்டாவது சீசனிலும் இவரே தொகுப்பாளரானார், இந்நிலையில் கமல் தன் விஸ்வரூபம்-2 படத்தை இந்தியா முழுவதும் ப்ரோமோட் செய்து வருகின்றார்.


இதற்காக பல பாலிவுட் நிகழ்ச்சிகளில் கமல் கலந்துக்கொண்டார், சல்மான் கான் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் கூட சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டார்.

தற்போது தெலுங்கில் நானி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொள்ள இருக்கின்றார், இதை வைத்து தன் விஸ்வரூபம்-2 படத்தை தெலுங்கில் ப்ரோமோட் செய்யவுள்ளாராம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!