“விசுவாசம்” கதைக்கு பின்னால் மறைந்திருக்கும் இரகசியம்..!!


அஜித்தின் 58-வது படத்தின் தலைப்பு வெளியானதால் அவரது ரசிகர்கள் அதனை வரவேற்று உள்ளனர்.

வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் வி வரிசையில், தல அஜித் விசுவாசம் படத்தில் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தை அடுத்த தீபாவளிக்கு வெளியிட முடிவெடுத்துள்ளது படக்குழு.

இந்த நிலையில், அஜித்தின் 58-வது படத்தின் தலைப்பு தொடர்பாக இயக்குனர் சிவாவுடன் தான் அடுத்த படம் என சொன்னதும் சில பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

முதலில் வீரம்-2 என்று டைட்டில் வைக்கலாம் என்று முடிவு எடுத்தார்களாம். ஆனால், அப்படத்தின் நிறுவனமான விஜயா புரோடக்ஷன்ஸ் வீரம் பட விஷயத்தால் கிளியரன்ஸ் கொடுக்க மறுத்துவிட்டார்கள்.


இதனையடுத்து தான், வி என்று ஆரம்பிக்கும் “விசுவாசம்” என்று படத்தின் தலைப்பை வைத்துள்ளனர்.

மேலும், நான்காவது முறையாக தல அஜித் & சிவா இணையவுள்ளார்கள். இவர்கள் இணையும் படத்திற்கு வைத்துள்ள ‘விசுவாசம்’ தலைப்பை “தன்னை உயிராக நேசிக்கும் ரசிகர்கள் எனக்கு விசுவாசமாக இருக்கிறார்கள், நானும் அவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும்” என்று அஜித் கூறுவதால் அந்த வைத்துவிட்டனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!