“வாயாடி பெத்த புள்ள” வனிதாவுக்கு ஷாக் கொடுத்த பிக்பாஸ்!

பிக் பாஸ் நிகழ்சியில் இந்த வாரம் முழுக்க வீட்டில் உள்ள போட்டியாளர்களின் குடும்பத்தினர் போட்டியாளர்களை சந்திக்க வருவார்கள்.

இதுவரை 2 இரண்டு போட்டியார்களின் குடும்பத்தினர் வந்து உள்ளனர். லாஸ்லியா தனது முழு குடும்பத்தையும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தார்.

லாஸ்லியா தனது அப்பாவை பார்த்தது நேயர்களிடையே மிகவும் உணர்ச்சி பூர்வாகமாக இருந்தது. அவரின் கண்டிப்பும் கோபமும் அனைத்து அப்பாக்களுக்கு வரக்கூடியதுதான்.

அவர்களை தொடர்ந்து அடுத்ததாக தர்ஷன் குடும்பத்தினர் வருகின்றனர். மேலும் அவர்களை தொடர்ந்து வனிதாவின் 2 பெண் குழந்தைகள் வருகிறார்கள். அவர்களை பார்த்த வனிதா மிகவும் இனிமையானவர் போன்று மாறிவிடுகிறார்.

மற்ற போட்டியாளர்களும் வனிதா மீது கொண்ட கோபத்தையும் மறந்து அவர்களுடன் விளையாடுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் எப்பவும் இருக்கும் கோவக்காரி வனிதா தனது குழந்தைகளை பார்த்ததும் அம்மாவாக மாறி இருப்பது நேயர்களை ஈர்த்து உள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.