முதல்ல இடுப்பு, இப்போ முதுகு… மீண்டும் சேலையில் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் படவாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றனர் அவர்கள். பாலிவுட் முதல் கோலிவுட் வரை இது தான் தற்போதைய டிரெண்டாக உள்ளது.

தமிழ் திரைப்பட நடிகைகள் ராய் லட்சுமி, சமந்தா, ஹன்சிகா, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் இந்த பட்டியலில் உள்ளனர். இதில் சமீபத்தில் இணைந்திருப்பவர் ரம்யா பாண்டியன்.

முதல் கவர்ச்சி புகைப்படத்திலேயே சென்சேஷன் ஆகிவிட்டார். புடவையில் இடுப்பு மடிப்பு தெரியும் படி ரம்யா கொடுத்த போஸ்கள், இணையத்தில் வைரலானது. ரசிகர்கள் அனைவரும் ஜொள்ளர்களாக மாறி, ரம்யாவின் இன்ஸ்டாவை எக்குதப்பாக எகிற வைத்துவிட்டனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு கவர்ச்சி போட்டோவை போட்டு, ரசிகர்களின் டெம்ப்ரேச்சரை எகிறவைத்திருக்கிறார் ரம்யா. இதிலும் புடவையில் இருக்கும் ரம்யா, இந்த முறை தனது பின்னழகை வெளிப்படுத்தி இருக்கிறார். ‘ஜன்னல் வெச்ச ஜாக்கெட்டில்’ கவர்ச்சி பொங்கும் இந்த போட்டோவும் வைரலாகியுள்ளது.

“அய்யோ இந்த இடுப்ப வெச்சுக்கிட்டு இந்த புள்ள படுத்துறபாடு.. யப்பா பாண்டுரங்கா… அடுத்த போட்டோஷூட் எப்போ.. அதையும் சாரிலயே பண்ணுங்க… போதும் போதும் போதும் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு…”, இப்படி பலரும் பலவிதமாக ஜொள்ளுவிட்டு வருகிறார்கள்.

ஜோக்கர், ஆண்தேவதை உள்ளிட்ட படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து நல்ல பெயர் வாங்கியவர் ரம்யா பாண்டியன். ஆனால் நல்ல நடிகை எனும் பெயர் அவருக்கும் புதிய பட வாய்ப்புகளை பெற்றுத்தரவில்லை. இதன் காரணமாகவே அவர் அண்மை காலமாக கவர்ச்சி போட்டோ ஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார். படத்தில் நடித்து கிடைக்காத பப்ளிசிட்டியை, இந்த புகைப்படங்கள் அவருக்கு பெற்றுத் தந்திருக்கின்றன என்பதே உண்மை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.