பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவது யார் தெரியுமா வெளியான ஆதாரம்உள்ளே

பிக்பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்கள் கவீன், முகன், ஷெரீன், சேரன் மற்றும் லாஸ்லியா ஆகியோரை நாமினேட் செய்தனர்.

இந்த வீட்டில் தன்னுடைய உயிர் நண்பனாக நினைக்கும் கவீனை, சாண்டி நாமினேட் செய்துவிட்டு கண்கலங்கியது, வீட்டில் இருந்தவர்களை மட்டுமின்றி, பார்த்தவர்கள் பலரையும் கண்கலங்க வைத்துவிட்டது.

அதுமட்டுமின்றி கவீனை கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும் என்று ஒரு குழுவும், கவீன் வெளியேறினால் என்ன என்று ஒரு குழுவும் சமூகவலைத்தளங்களில் சண்டை போட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த நாமினேஷன் நேற்று துவங்கிய நிலையில், இதில் யார் முதலில் இருக்கிறார்? யார் கடைசியில் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன் படி கவீன் முதல் நாள் 32 சதவீத ஓட்டுகளுடன் முதல் இடத்திலும், முகன் ரா 214 சதவீத ஓட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், சேரன் 20 சதவீத ஓட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், லாஸ்லியா 13 சதவீத ஓட்டுகளுடன் நான்காவது இடத்திலும், கடைசி இடத்தில் ஷெரீன் 11 ஓட்டுகளுடன் உள்ளார்.

இன்னும் சில நாட்கள் இருப்பதால், இந்த ஓட்டின் முடிவு எப்படி வேண்டும் என்றாலும் மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.