சாண்டியை எல்லை மீறி பேசிய மது.! கடுப்பான சாண்டியின் முன்னாள் மனைவி காஜல்.!

விஐய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது நடந்து கொண்டிருக்கிறது.

நேற்றைய எபிசோடில் மதுமிதாவிற்கு சாண்டி டாஸ்க் ஒன்றை கொடுத்திருந்தார். அப்போது மதுமிதா தன்னுடைய முகம் எரிவதாக கூறி சாண்டியிடம் சண்டை இட்டார்.

மேலும் த்தூ நீயெல்லாம் ஆம்பளையா எனவும் மோசமாக விமர்சனம் செய்திருந்தார். இதையெல்லாம் பார்த்த ரசிகர்கள் மதுமிதாவுக்கு ஓவர் வாய் என விமர்சனம் செய்து வந்த நிலையில் காஜல் பசுபதியும் அவருடைய ரியாக்ஷனை பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/kaajalActress/status/1154071935833133056

இது குறித்த டீவீட்டில் மது வார்த்தையை அடக்கி பேசு, என்ன காரி துப்புர என விமர்சித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.