பிக் பாஸ் விட்டா கவினுக்கும் சாக்ஷிக்கும் கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்க போல – வீடியோவுடன் இதோ.!

கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ள 16 போட்டியாளர்களில் கவினும் ஒருவர்.

இவர் சாக்ஷி அகர்வாலுடன் காதல் கொண்டு தற்போது அந்த காதல் முடிவுக்கும் வந்து விட்டது. இதற்கு கமல் கூட பஞ்சாயத்து பேசி இருந்தார்.

இந்நிலையில் இன்று பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த டாஸ்கில் கவினுக்கு பாடல் ஒன்றை பாட கூறியுள்ளார்.

அந்த பாடல் சாக்ஷியின் காதலை மீண்டும் தூண்டும் வகையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் விட்டா கல்யாணம் பண்ணி வச்சு தான் வீட்டுக்கு அனுப்புவீங்க போல கலாய்க்கவும் விமர்சிக்கவும் தொடங்கியுள்ளனர்.

https://twitter.com/vijaytelevision/status/1153145139512127488

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.