அடையாளமே தெரியாத படி ஸ்டைலாக மாறிய சென்ராயன்…. வைரலாகும் புகைப்படம்..!

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு போட்டியாளர் நிச்சயம் இருப்பார்கள் அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று, ஒளிபரப்பான வெள்ளேந்தியான குணத்தால் பல ரசிகர்களின் மனதை கவர்ந்தார் காமெடி நடிகர் சென்ராயன்.

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சென்ராயன், அதன் பின்னர் ஆடுகளம், சிலம்பாட்டம், மூடர் கூடம் என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவருக்கு சினிமாவை விட அதிகம் பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். திருமணம் முடிந்து நீண்ட வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து வந்தார் சென்ராயன்.

இந்த நிலையில் சென்ராயன் மனைவிக்கு கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அதனை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார் சென்ராயன். இந்த நிலையில் தனது இரண்டு மாத குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் சென்ராயன் சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் ஒரு கிராமத்தில் அவர் போலத்தான் இருந்து வந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட இவர் கிராமத்தில் தான் இருந்தார் ஆனால் தற்போது பிஎம்டபிள்யூ பைக் கூலிங் கிளாஸ் ஜீன்ஸ் என்று படு ஸ்டைலாக தனது லைஃப் ஸ்டைலை மாற்றியுள்ளார் சென்றாயன். ஆனால், இது அவர் வாங்கிய பைக் தானா இல்லை ஏதாவது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமா என்பது தான் தெரியவில்லை.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.