“இனிமே தான் லாஸ்லியாவின் உண்மை முகத்தை பார்க்க போறீங்க” பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர் ஓபன் டாக்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகி விட்டது.

மூன்றாவது சீசன் குறித்து நடிகர் நடிகைகளும் கமெண்ட் கொடுக்க தொடங்கி விட்டனர், சதிஷ், கஸ்தூரி ஆகியோர் தொடர்ந்து ஆக்டிவாக பிக் பாஸ் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகரும் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளருமான தாடி பாலாஜி அளித்துள்ள பேட்டி ஒன்றில் பிக் பாஸ் 3 குறித்து பேசியுள்ளார்.

அந்த பேட்டியில் கமல் சார் இருக்கும் போதே சண்டை போட்டு கொள்வதெல்லாம் சரி இல்லை, அவர் சென்ற பிறகு கூட இவர்கள் சண்டை போட்டு கொள்ளலாம் என கூறியுள்ளார்.

மேலும் லாஸ்லியா குறித்து கேட்டதற்கு அமைதியான பொண்ணு பட்டாம் பூச்சி போல பறந்து கொண்டே இருக்கிறது,

ஆனால் அவங்களையும் யாராவது ஏத்தி விட்டால் அவர்களுடைய கோபத்தையும் இன்னொரு முகத்தையும் நிச்சயம் பார்க்கலாம் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.