தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸ் மட்டும் இத்தனை கோடியா..

நடிகர் விஜய்யின் 65வது படம் பீஸ்ட். நெல்சன் இயக்கும் இப்படத்தில், முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் விரைவில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தின் இந்தி டப்பிங் ரைட்ஸ் மட்டுமே சுமார் ரூ. 50 கோடிக்கு பிரபல நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!