மகன்களுடன் ஜாலியாக கிரிக்கெட் விளையாடும் தனுஷ் – வைரலாகும் புதிய வீடியோ!

தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்திருக்கும் படம் அசுரன். கொடி படத்தை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார்.

பூமணியின் வெக்கை எனும் நாவலை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு தனுஷ், தற்போது ஓய்வெடுத்து வருகிறார்.

இந்த ஓய்வில் முழுக்க முழுக்க குடும்பத்துடன் நேரம் செலவழிக்கும் தனுஷ், தனது மகன்களுடன் தனக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டை ஜாலியாக விளையாடி உள்ளார்.

இந்த வீடியோ தற்போது வெளியாகி அவர் ரசிகர்களால் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.