பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையுமா போலீஸ்? கைது செய்யப்படுவரா வனிதா!

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா. வனிதாவிற்கும் தெலுங்கானாவை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவருக்கும் கடந்த 2007 ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஜோவிதா என்ற மகள் உள்ளார்.பிறகு 2012 ஆண்டு ஆனந்தராஜ் மற்றும் வனிதா இடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக விவகாரத்து பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் ஜோவிதாவை வனிதா கடந்த பிப்ரவரி மாதம் சென்னைக்கு அழைத்து வந்துள்ளார். இதனையடுத்து தனது மகளை கடத்தி சென்றுவிட்டதாக வனிதா மீது ஆனந்தராஜ் போலீஸில் ஆள் கடத்தல் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதனால் வனிதாவை கைது செய்ய தெலுங்கானா போலீஸார் மும்முரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வனிதா தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டுள்ளார்.எனவே தற்சமயம் பிக்பாஸ் வீடு செட் அமைக்கப்பட்டுள்ள நசரத்பேட்டை போலீஸாரிடம் தெலுங்கானா போலீஸார் உதவியை கோரியுள்ளனர். இதனால் எந்நேரத்திலும் வனிதா கைதாகலாம் என கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.