‘அண்ணாதுரை’… அம்மா சென்டிமென்டுடன் வெளியாகுகின்றது..!!!


சீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ‘அண்ணாதுரை’. இந்தப் படத்தில் அண்ணாதுரை, தம்பிதுரை என இரட்டையர்கள் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. இயக்குநரும் இரட்டையர்தான். எனவே, அவர் வாழ்வில் நடந்த சம்பவங்களில் இருந்தே இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கிறார்.

நடிகரின் நடிப்பில் சூப்பர் ஹிட்டான படம் ‘பிச்சைக்காரன்’. அம்மா சென்டிமென்டுடன் உருவாகியிருந்த அந்தப் படம் பயங்கர ஹிட் என்பதால், இந்தப் படத்திலும் அம்மா சென்டிமென்ட் நிறைந்திருக்கிறதாம். வருகிற வெள்ளிக்கிழமை இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!