பெரிய இயக்குனராகவும், நடிகராகவும் உருவெடுத்த பிக் பாஸ் போட்டியாளர் சேரனின் முழு விபரம்

சேரன் பாரதிக் கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரின் உதவி இயக்குநர். ஆட்டோகிராப் படம் மூலம் நடிகராக மாறினார். தேசிய விருது பெற்ற படங்களை இயக்கியவர். நல்ல தரமான படங்கள் மட்டுமல்லாது அதை மக்கள் ரசிக்கும்படியும் எடுத்தவர். திருட்டு விசிடி எதிராக ஒரு அமைப்பை ஆரம்பித்தார். அதில் அவருக்கு ஏற்பட்ட வீழ்ச்சி அவரை பட இயக்கத்திலிருந்து தள்ளி வைத்தது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் விஷாலுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டார்.

பெரிய இயக்குனராகவும், நடிகராகவும் உருவெடுத்த சேரன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருப்பது மிகப்பெரிய ஆச்சர்யம் தான். கிட்டத்தட்ட 11 படங்களை கதை எழுதி, இயக்கி உள்ளார்.
15 படங்கள் வரை நடித்துள்ளார். அவரின் வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, உள்ளிட்டவை தேசிய விருதுகள் வென்றுள்ளன.

பொற்காலம், வெற்றி கொடி கட்டு, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட படங்கள் தமிழ் நாடு திரைப்பட விருது வென்றுள்ளது. அதோடு பிலிம்ஃபேர் விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

புரட்சி செய்த சேரன்:
திருட்டு சிடி பிரச்னையால் தன் படங்கள் தோல்வி அடைவதாக கூறி, நேராக டிவியிலெயே தன் படங்கள் ஒளிபரப்ப சினிமா டு ஹோம் எனும் புதிய முறைப்படி தனது ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தை நேராக திரையரங்குகளுக்கு பதிலாக வீட்டு தொலைக்காட்சியிலேயே பார்க்க வைத்தார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.