16 வயதில் மாடலான பிக் பாஸ் 3 போட்டியாளர் நடிகை ஷெரின்

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் 3வது சீசன் நிகழ்ச்சி இன்று தொடங்கியுள்ளது. பிக்பாஸில் பங்கேற்கும் நடிகை ஷெரின் என்பவரின் முழு விபரங்களை இங்கு பார்ப்போம்.

ஷெரின் கன்னட மாடல். படிப்பிற்குப் பின் 16 வயதில் மாடலான இவர் அதே வருடத்தில் துருவா எனும் கன்னட படத்தில் அறிமுகமானார். அதே வருடத்தில் தமிழில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானார். தனுஷ், செல்வராகவனுக்கு திருப்புமுனையாக அமைந்த துள்ளுவதோ இளமை திரைப்படம் ஷெரினுக்கும் மிக முக்கியமான படமாக அமைந்தது.

தமிழ் ,கன்னடம் , மலையாளம் என பல மொழிகளிலும் எண்ணற்ற படங்களில் ஹிரோயினாக நடித்துள்ளார். படங்களில் வாய்ப்பு குறைந்த பின் நடிப்பிற்கு முழுதாக முழுக்கு போட்டிருந்தவர் தற்போது பிக் பாஸ் மூலம் மீண்டும் லைம் லைட்டுக்குள் வந்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.