பிரச்சனைகளில் சிக்கி பத்திரிக்கைகளில் வலம் வந்து கொண்டே இருந்த வனிதாவிஜயகுமார்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நேற்று முதல் தொடங்கியது. அறிமுக விழாவில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் நுழையும் நிகழ்வு நடந்தது. மொத்தம் 15 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். அடுத்து இரண்டு போட்டியாளர்கள் போட்டியின் நடுவே செல்வார்கள் என தெரிகிறது.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகர் குடும்பமான விஜயகுமார் – மஞ்சுலாவின் மகள் வனிதா விஜய குமார் பங்கேற்றுள்ளார்.

வனிதா விஜயகுமார்
நடிகர் விஜய்குமார குடும்பத்து தகராறு பெண். மாணிக்கம் படத்தில் ராஜ்கிரன் ஜோடியாக ஹிரோயினாக அறிமுகமானவர். நடிப்பு வாய்ப்பு சரியாக அமையாததால் கல்யாணம் செய்து கொண்டு செட்டிலானவர்.

தொடர்ந்து இவரது கல்யாண வாழ்வு மற்றும் விஜய்குமார் குடும்பத்துடனும் பிரச்சனைகளில் சிக்கி பத்திரிக்கைகளில் வலம் வந்து கொண்டே இருந்தார். நடிகர் விஜயகுமாருடன் சொத்துப் பிரச்சனைகளில் போலிஸ் கோர்ட் என பெரும் பிர்ச்சனைகளிலும் சர்ச்சைகளிலும் சிக்கியவர். விஜயகுமார் கமலுக்கு நெருங்கிய நண்பர் என்ற வகையில் இவர் மிக முக்கிய போட்டியாளராக உள்ளார்.

படங்கள்
சந்திரலேகா படத்தில் தொடங்கி, மாணிக்கம், ஹெய்டர் பிரதர் (மலையாளம்), தேவி (தெலுங்கு), நான் ராஜாவாகப் போகிறேன், சும்மா நச்சுன்னு இருக்கு படத்தில் நடித்துள்ளார்.

View this post on Instagram

@dr_vijay_kumar_family @kollywoodofficial

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

எம்ஜிஆர் சிவாஜி ரஜினி கமல் படத்தை தயாரித்து அதில் தனது கணவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். இவரின் குடும்ப பிரச்னி பல நாட்கள் பிரேக்கிங் செய்தியாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.