ஐரோப்பாவில் அசத்தலான ஒரு ரோட் ட்ரிப் – கர்ப்பிணியாக ஊர் சுற்றும் எமி ஜாக்சன்!

தற்போது 6 மாத கர்ப்பிணியாக இருக்கும் நடிகை ஏமி ஜாக்ஸன், பேறு காலத்தில் உடல்நலனில் அக்கறை செலுத்தாமல் ஐரோப்பா முழுவதும் ஊர் சுற்றி வருவதால் அவருடைய ரசிகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழில் ’மதராசப்பட்டினம்’ படத்தில் அறிமுகமான நடிகை ஏமி ஜாக்ஸன், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடித்து வந்தார். இங்கிலாந்தை சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவை அவர் மிகவும் விரும்பினார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவர், திடீரென இங்கிலாந்து தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமானார். அப்போது இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனாயிட்டோ என்பவருடன் அவருக்கு அறிமுகம் ஏற்பட்டது.

https://www.instagram.com/p/ByX1iJapwNZ/?utm_source=ig_embed

அந்த அறிமுகம் காதலாக மாற, இருவரும் ஒரே வீட்டில் இணைந்து வாழ முடிவு செய்தனர். இந்நிலையில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அறிவித்தார்.

அதை தொடர்ந்து எமி ஜாக்சன் , ஜார்ஜ் பனாயிட்டோவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தன. கடந்த ஆங்கில புத்தாண்டு நாளான்று இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெறவுள்ளது.

https://www.instagram.com/p/BypWylmJnZv/

தற்போது 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் எமி ஜாக்சன், பல்வேறு சமூகப் பணிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் ஐரோப்பா முழுவதும் ரோடு ட்ரிப் செய்து வருகிறார். இதற்காக ’காஷ் அன்டு ராக்கெட் இன்ஷியேட்டிவ்’ என்ற அமைப்புடன் அவர் கைக்கோர்த்துள்ளார்.

https://www.instagram.com/p/BykEDdJJhrG/?utm_source=ig_embed

இந்த அமைப்பு, பிரபல துறைகளில் இயங்கும் பெண்களை தேர்வு செய்து அவர்கள் மூலம் பலவேறு சமூகப் பணிகளுக்கு நிதியை திரட்டும். இம்முறை இதற்காக நடிகை எமி ஜாக்சன் உள்ளிட்ட சில பிரபலமான பெண்கள் சிலர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, 6 மாதம் கர்ப்பிணியான எமி ஜாக்சன் ஐரோப்பா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அங்கு பல பிரபலங்களை சந்தித்து அவர்களிடம் நிதி திரட்டி வருகிறார்.. தன்னுடைய இந்த பயணம் தொடர்பான புகைப்படங்கள், தகவல்களை அவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டும் வருகிறார்.

https://www.instagram.com/p/ByiNULypLXn/?utm_source=ig_embed

அதன்படி, அவருடைய சமீபத்திய பதிவில் ஆறு மாத கர்ப்பிணியான தனக்கு பித்து பிடித்துள்ளதாக பலரும் கூறுகின்றனர். எனினும், இந்த அனுபவம் புதுமையாக உள்ளது என்று ஏமி குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுக்கு கீழ் பலரும் உடல்நலனில் அக்கறைக் கொள்ளும் படி ஏமிக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.