விஜய் சேதுபதியின் பச்சை வேஷ்டி அவதாரம்: பக்தி பரவசத்துடன் படப்பிடிப்பை தொடங்கிய படக்குழு!

அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் அவரது 33ஆவது படத்தின் படப்பிடிப்பு பழனியில் பக்தி பரவசத்துடன் பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் சிந்துபாத் திரைப்படம் விரைவில் வரவுள்ளது. அதில் அவர் தன மகனுடன் இணந்து நடித்துள்ளார். தற்போது sp ஜனநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து விஜய்சேதுபதி-அமலாபால் நடிக்கும் VSP33 படத்தை இன்று பழனியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் துவக்கிவைக்கிறார்.

சந்திரா ஆர்ட்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி அமலாபால் நடிக்கும் புதிய படம் VSP 33. இந்தப்படத்தில் விஜய்சேதுபதிஅமலாபால் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும்இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டிக்கு சென்று படப்பிடிப்பை தொடர திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக இசக்கி துரை தயாரிக்கிறார்.

பேராண்மை, புறம்போக்கு படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது உதவியாளர் இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தை எஸ்.பி ஜனநாதன் க்ளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைக்கிறார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு வருடம், காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய இந்த கதையில் சர்வதேசஅளவிலான பிரச்சனையும் மையமாக பேசப்பட இருக்கிறது. இதில் விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கிறார். இப்படத்தின் பெயரை சஸ்பென்ஸாக வைத்திருக்கும் படக்குழுவினர் தற்காலிகமாக VSP 33 என்று படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

VSP 33 யில் முன்னணி கதாநாயகி மற்றும் ஒரு வெளிநாட்டு பெண்ணும் கதாநாயகிகளாக நடிக்கவுள்ளனர். இதில் நடிக்க இருக்கும் நடிகர் நடிகைளை புது வித பாணியில் அறிமுகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்தடுத்து அமர்க்களப்படுத்திய அமிதாப் பச்சன்: முதலில் விவசாயக் கடன், 2ஆவது புல்வாமா நிதியுதவி!

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

எழுத்து – இயக்கம் – வெங்கட கிருஷ்ண ரோகாந்த்

இசை – நிவாஸ் கே. பிரசன்னா

ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசுவாமி

கலை இயக்குநர் – ஜான் பிரிட்டோ

ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல் ராஜ்

எடிட்டிங் – சதீஷ் சூர்யா

மக்கள் தொடர்பு – நிகில்

தயாரிப்பு – சந்திரா ஆர்ட்ஸ்

தயாரிப்பாளர்- இசக்கி துரை

நிர்வாக தயாரிப்பு-ரகு ஆதித்தியா

இணை தயாரிப்பு – சினி இன்னோவேஷன்ஸ்

இணை தயாரிப்பாளர் – ஆர்.கே. அஜெய்குமார் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.