பிக்பாஸ் 3 துவங்கும் தேதி இதுதானா? லேட்டஸ்ட் தகவல் இதோ!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். பல சர்ச்சைகளை தாண்டி அந்த நிகழ்ச்சியில் entertainmentக்கு பஞ்சம் இருக்காது என்பதால் பல ரசிகர்கள் தொடர்ந்து பார்த்துவருகின்றனர்.

3வது சீசன் எப்போது துவங்கும் என ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், அது ஜூன் 23ம் தேதிதான் துவங்குகிறது என்று ஒரு செய்தி தற்போது பரவி வருகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துவங்கவுள்ள நிலையில், இந்தியா அணி விளையாடும் போட்டி இல்லாத ஞாயிற்றுக்கிழமையை தான் விஜய் டிவி தேர்ந்தெடுத்துள்ளது.

அது உண்மையா என்பது அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது தெரியும்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.