அஜித்துடன் இணைவது உண்மையா, என்ன கதையாக இருக்கும்- சுதா கொங்காரா கொடுத்த தகவல்

அஜித் தனது வலிமை படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். அண்மையில் அவர் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது.

அதேபோல் இயக்குனர் சுதா கொங்காரா இயக்கிய சூரரைப் போற்று திரைப்படம் இம்மாதம் 12ம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கிறது.

படம் சம்பந்தமாக அண்மையில் சுதா கொங்காரா பேட்டி கொடுத்திருந்தார். அதில் பேசும்போது அவரிடம் அஜித் படத்தை நீங்கள் இயக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது, உண்மையா? வதந்தியா? என கேட்டனர்.

அதற்கு அவர், இது இரண்டுமே நான் சொல்லவில்லை, இரண்டுமே உண்மை இல்லை என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!