மிஸ்டர் & மிசஸ் சின்னத்திரை டைட்டில் வின்னர் இவர்கள் தான்! வெளியான ரகசியம்


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்னத்திரையின் நிஜத் தம்பதிகள் கலந்துகொள்ளும் ரியாலிட்டி ஷோ மிஸ்டர் அண்டுமிசஸ் சின்னத்திரை.

செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி, மணிமேகலை- உசேன், சங்கரபாண்டியன்– ஜெயபாரதி, நிஷா– ரியாஸ், திரவியம்– ரித்து, தங்கதுரை– அருணா, அந்தோணிதாசன்– ரீட்டா, சுபர்ணன்– பிரியா, பிரின்ஸ்- ப்ரியா என சீரியல் பிரபலங்கள் திரளாக கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் ஜோடிகளுக்கு பல்வேறு சுற்றுக்கள் மூலம் பலவிதமான டாஸ்குகள் கொடுக்கப்பட்டன.

அவற்றை வெற்றிகரமாகக் கடந்து ஆறு ஜோடிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்கள். சுபர்ணன்– ப்ரியா, ப்ரியா– பிரின்ஸ், தங்கதுரை– அருணா ஆகிய ஜோடிகள் வெளியேறினார்கள்.

சில தினங்களுக்கு முன் இறுதிச்சுற்று இரண்டு சுற்றுகளாக நடந்தது. இதில் அனைத்து டாஸ்குகளிலும் வென்று `மிஸ்டர் அண்டு மிசஸ் சின்னத்திரை 2019’ பட்டத்தை வென்றுள்ளது சங்கரபாண்டியன்– ஜெயபாரதி ஜோடி.

சங்கரபாண்டியன் சரவணன் மீனாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மிஸ்டர் அண்டுமிசஸ் சின்னத்திரை இறுதிச் சுற்று நாளை(19.05.19) மாலை டிவியில் ஒளிப்பரப்பு செய்யப்படவுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.