விஜய் வீட்டின் முன் ரசிகர்கள் செய்த செயல்! அதிர்ச்சி புகைப்படம்!

தளபதி விஜய்யின் வீட்டிற்கு வெளியிலேயே அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் தளபதி 63 என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து தளபதி 64 மற்றும் தளபதி 65 ஆகிய படங்களை இயக்குவதற்கு இயக்குனர்களிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதில், லோகேஷ் கனகராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் ஏற்கனவே கதை சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

https://twitter.com/Karthiv56903721/status/1128880135363411969

உலகம் முழுவதும் விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். விஜய்யின் படம் என்றாலே போதும், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம், திருவிழா போல் காட்சியளிக்கும். அதோடு, விஜய்க்கு பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்து கோலாகலமாக கொண்டாடுவார்கள்.

இந்த நிலையில், விஜய் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நிலையில், அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் நின்று கொண்டு வீட்டை கோயிலாக கருதி, சாமி கும்பிட்டுள்ளனர். அப்போது, எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.