காஞ்சிபுரம் புடவையுடன் கேன்ஸ் ரெட் கார்பெட்டில் வலம் வந்த பாலிவுட் நடிகை!

பிரபல பாலிவுட்டின் முன்னணி நடிகையான கங்கனா ரணாவத், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு காஞ்சிபுரம் புடவை உடுத்தி வந்திருந்தார்.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். பிரான்ஸ் நாட்டில் ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 72ஆவது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸ் நாட்டில் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில், பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக தீபிகா படுகோனே, ப்ரியங்கா சோப்ரா, கங்கனா ரணாவத் ஆகியோர் பலர் கலந்து கொண்டு ரெட் கார்பெட் அணிவகுப்பு நடத்தியுள்ளனர்.

https://twitter.com/FeminaIndia/status/1129037760021651459

பொதுவாக, ரெட் கார்பெட்டில் வரும் நடிகைகள் வித்தியாசமான உடை அணிந்து வருவது வழக்கம். அதிலும், பல நடிகைகள் எல்லைமீறி கவர்ச்சி காட்டுவதுண்டு. அதில், நடிகை கங்கனா ரணாவத் கொஞ்சம் விதிவிலக்காக கவர்ச்சி காட்டாமல், தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், கேன்ஸ் விழாவின் ரெட் கார்பெட்டில் காஞ்சிபுரம் புடவையுடன் சென்றுள்ளார். அது, பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.