பாஜகவில் இணைந்த தளபதி ரசிகர்கள்..!! எதற்காக இப்படியொரு துரோகம்..!!


கடந்த சில வருடங்களாக பரபரப்பு பஞ்சமில்லாத நடிகராக மாறி விட்டார் நடிகர் விஜய்.

இவரின் படங்கள் பாக்ஸ் ஆபிசில் பட்டைய கிளப்பினாலும் மற்றொரு பக்கம் சர்ச்சையும் கிளப்புகிறது. சமீபத்தில் மெர்சல் படத்தால் பாரதிய ஜனதா கட்சி பிரச்சனையை உண்டாக்கியது.

அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா விஜய்யை மதரீதியாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரின் முன்னிலையில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த 60 விஜய் ரசிகர்கள் பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இதில் இணைந்ததாக கூறப்படும் நபர்கள் ஏற்கனவே பாஜகவில் இருந்தவர்கள் தான். பாஜகவின் முக்கிய பிரமுகர்களான பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, அர்ஜுன் சம்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் தான்.

கட்சியில் இருந்தவர்களை விஜய் இயக்கத்தில் சேர்த்து மறுபடியும் பாஜகவில் இணைந்தது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கியுள்ளனர் என்று மற்ற விஜய் ரசிகர்கள் கோபத்துடன் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#