பிக்பாஸ் பிரபலத்திற்கு விரைவில் திருமணம்..!!! மணப்பெண் யாருனு தெரியுமா..?


பிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகன் கட்டிப்பிடி வைத்தியத்தால் பிரபலமானவர். இது குறித்து சில சர்ச்சைகள் வந்தது. பல மீம்ஸ்களும் இணையதளத்தை ஆக்கிரமித்தன.ஆனாலும் அனைவரின் மீதும் பாசமானவர், நன்கு சமைக்க தெரிந்தவர், தலைவராக அனைவரையும் அனுசரித்து செல்லக்கூடியவர் என பல நல்ல விசயங்களும் இவரிடம் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் பிக்பாஸ் வீட்டில் கூறியபடி நூலகம் அமைக்க வேண்டும் என்ற முதல் ஆசையை இப்போது நிறைவேற்றி வருகிறார். இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. அதே போல அவரின் அப்பா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது சினேகன் திருமணத்தை நான் பார்க்க வேண்டும் என கூறினார். சினேகன் தன் திருமணம் குறித்த அறிவிப்பை வரும் 2018 ஜூனில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் அவர் பொம்மிவீரன் என்ற படத்தை தானே இயக்கி நடித்து வருகிறாராம். பிக்பாஸ்க்கு முன்பே இப்படம் ஆரம்பிக்கப்பட்டு பின் பணப்பற்றாக்குறையால் கிடப்பில் போடப்பட்டதாம். இந்த படத்தையும் அவர் 2018 ல் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். கவிஞரின் கை கோர்க்கும் கண்மணியை காண காத்திருப்போம் சில காலம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#