சின்னத்திரை நயன்தாரா தான் நீங்க! வாணி போஜனை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்..!

வெள்ளித்திரையில் ஒரு நயன்தாரா இருப்பதுபோல் சின்னத்திரையில் நயன்தாரா வாணி போஜன் என்று பல ரசிகர்களும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு ரசிகர்களை தன்பக்கம் வைத்துள்ளார் வாணி போஜன்.

சின்னத்திரையில் பிரபலமான வாணி போஜன் புதுமுக இயக்குநர் சார்லஸ் இயக்கத்தில் வைபவ்-க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை நிதின் சத்யா தயாரித்துள்ளார். இன்னும் இந்த படம் வெளிவராத நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/p/BxUvujUgg4A/

தற்போது இவர் ஒரு புதிய படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் அடடா இவ்வளவு அழகாக உள்ளார் என வியந்து பார்த்து வருகின்றனர்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.