விஷால் – அனிஷா திருமணம்: தேதியை அறிவித்த விஷால்!

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் விஷால் இருக்கிறார். இந்த நிலையில், விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால், திருமணம் எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பை மட்டும் விஷால் அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், இன்று விஷால் நடிப்பில் உருவாகியிருந்த அயோக்யா படம் வெளியாக இருந்த நிலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக அதன் விஷால் – அனிஷா அல்லா ரெட்டி திருமண நிச்சயதார்த்தம்!வெளியீட்டு தேதி தள்ளிவைக்கப்பட்டது. நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்திருந்தார். அதன்படி, கட்டிடம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில், விஷால் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.

அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றது. ஆனால், எங்கு நடைபெறும், வரவேற்பு நிகழ்ச்சி எப்போது போன்ற விவரங்களை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால் அறிவித்தபடி, நடிகர் சங்க கட்டிடத்தில் என்றால், அங்கு நடக்கும் முதல் திருமணம் விஷாலின் திருமணமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.