கவர்ச்சியாக நடிக்க நான் தயார்: சில்க் ஸ்மிதா ஆகும் ராஷ்மி!!!


மாப்பிள்ளை விநாயகர், தவுலத் படங்களில் நடித்த ராஷ்மி, பிரியமுடன் பிரியா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கிலும் இவர் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் முன்னணி நடிகைகளின் கவர்ச்சி போட்டியில் இவர் ஏற்று நடித்த குடும்பபாங்கான படங்கள் எடுபடவில்லை. பொறுத்துப் பார்த்த ராஷ்மி ‘குண்டுர் டாகிஸ்’ தெலுங்கு படத்தில் கவர்ச்சிக்கு துணிந்தார். ஹீரோ நரேஷுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்து சூட்டை கிளப்பி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். கவர்ச்சியாக நடிக்க சிக்னல் காட்டியவுடன் அதேபோல் நடிக்க ராஷ்மிக்கு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இதில் குஷியானவர் இனி கவர்ச்சி ஹீரோயின்களை ஒருகை பார்ப்பது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். இதுகுறித்து ராஷ்மி கூறியது: சேலை அணிந்து நடித்திருந்தாலும் ஒரு படத்தில் (குண்டுர் டாக்கிஸ்) கவர்ச்சி தெரியும்படி நடித்திருந்தேன். அதில் ஹீரோவுடன் நெருக்கமாக நடித்திருந்தாலும் எல்லையை தாண்டவில்லை.


கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கியவுடன் அதே போல் நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு வரத் தொடங்கின. அதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. சில்க் ஸ்மிதா, ஜோதிலட்சுமி போல் என்னால் கவர்ச்சியாக நடிக்க முடியும். ஆனால் அது காட்சிக்கு தேவையானதாக இருக்க வேண்டும். பணத்துக்காக கவர்ச்சியை காட்டி நடிக்க வேண்டுமென்றால் அந்த வேடத்தை ஏற்க மாட்டேன். அதற்கு வேறு வேலையை பார்க்க போய்விடுவேன். இவ்வாறு ராஷ்மி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!