20 ஆண்டுகளுக்கு பின்னும் ஏன் கொண்டாடப்படுகிறார் த்ரிஷா..?37 வது பிறந்த நாள் சிறப்பு

திரைத்துறையில் நடிகைகளுக்கான ஆயுட்காலம் 5 முதல் 6 வருடங்களுக்குள் மட்டுமே அடங்கி விடும் சூழலில், தமிழ் சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நாயகிக்கான அந்தஸ்த்தில் ஜொலித்து வரும் த்ரிஷாவுக்கு இன்று பிறந்தநாள்.

https://www.instagram.com/p/BsTMuEZn7b6/

இந்தியாவுக்கான திரைத்துறை பாணியில் ஒருவரை வயதை கடந்த பின்னும் ரசிப்பதும் பிடிப்பதும் கலைத்துவமானது. பெரும்பாலும் இதுபோன்ற ரசனை நடிகர்களுக்கு மட்டுமே அமையும். சிவாஜி கணேசன், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்கள் நடுத்தர வயதை கடந்த பிறகு அவர்கள் சாதித்த சாதனைகள் பல.

https://www.instagram.com/p/BrdVn-YHa0_/

ஆனால் நடிகைகளுக்கான வரிசையில் இவ்வாறான சாதனை படைத்தவர்கள் மிகவும் குறைவு தான். வயதை மீறியும் நடிகர்களை ரசிப்பதற்கும் பெரிய காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. தொடர்ச்சியாக பார்த்த படங்களில் அவர்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் அதற்கு காரணமாக இருக்கலாம்.

https://www.instagram.com/p/BvWI8BOnfsi/

த்ரிஷா தன்னை அந்த வரிசையில் ஈடுப்படுத்தி வருகிறார் என்றே தோன்றுகிறது. ஒருவரை பிடித்துக் கொண்டே இருப்பதற்கு பெரிய முதல் காரணமாக இருப்பது அவருடைய பெயர் தான். மெல்லிய, மார்டனான அதேசமயத்தில் தனித்து ஒலிக்கும் ”த்ரிஷா” என்ற பெயரே அவர் மீதான ஈர்ப்புக்கு முதல் காரணம்.

பிறகு அடுத்த வீட்டு பெண் போலவும், நடிகைக்கான அந்தஸ்த்தை பெற்றுது போல காணப்படும் அவருடைய தோற்றம் இரண்டாவது காரணம். இதனால் எந்த கதாராத்திரத்தின் தன்மைக்கும் அவரை பொருத்திப் பார்ப்பது இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் எளிதாகி விடுகிறது.

https://www.instagram.com/p/BsSwSjVn6sc/

இவை எல்லாம் தான், த்ரிஷா திரையுலகில் 20 ஆண்டுகளாக நீடித்து நிற்பதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. இயல்பாகவே இருப்பது, அலட்டிக்கொள்ளாமல் நடிப்பது, பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்வு செய்வது ஆகியவை த்ரிஷாவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக உள்ளன.

https://www.instagram.com/p/BvRjT7WnqIQ/

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை விட, தெலுங்கு திரையுலகில் த்ரிஷா கொடிக்கட்டி பறந்தார். நயன்தாராவின் வருகைக்கு பின்னரே அவரது நிலை அங்கே தள்ளாடியது. ஆனால் நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்த தொடங்க, தெலுங்கில் த்ரிஷாவின் மார்கெட் மீண்டும் உச்சத்துக்கு சென்றது. பிறகு இலியானா, அனுஷ்கா என டிரெண்ட் மாறியது.

https://www.instagram.com/p/BujJRRmnxmU/

தெலுங்குடன் ஒப்பிடும் போது, தமிழில் த்ரிஷாவுக்கு கிடைத்த வெற்றி மிகவும் குறைவுதான். தெலுங்கு படங்களில் நடித்ததற்காக அவருக்கு மூன்று முறை ஃபிலிம்பேர் விருதும் கிடைத்துள்ளது. தமிழில் கொடி படத்திற்காக துணை கதாபாத்திரங்களுக்கான பிரிவில் முதன்முறையாக அந்த விருதை அவர் வென்றார்.

https://www.instagram.com/p/Bt854LYH6s-/

தமிழில் நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தவருக்கு வரமாய் அமைந்தது ‘96’ படம். த்ரிஷா என்ற பெயரை மறந்து ஜானு என்று அவரை கூப்பிடும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடினார். இதன் பலனாய் நடப்பு ஆண்டில் முக்கிய விருதுகள் அனைத்தும் அவருக்கு கிடைத்து வருகின்றன. தமிழின் சிறந்த நடிகைக்கான ஃபிலிம்பேர் விருதை ‘96’ படத்திற்காக த்ரிஷா முதன் முறையாக பெறுவார் என்பதும் ரசிகர்களின் கணிப்பு.

20 ஆண்டுகள் தென்னிந்திய சினிமாவில் கோலோச்சி வரும் த்ரிஷாவுக்கு இன்று 36-வது பிறந்த நாள். ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா என அனைத்து சமூகவலைதளங்களிலும் அவருடைய பிறந்தநாள் தான் டிரெண்டிங். இதுபோல என்றென்றும் எவர்க்ரீன் நாயகியாக் ஜொலிக்க ”ஹேப்பி பர்த்டே த்ரிஷா”


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.