தொழிலா? காதலியா? – அர்ஜுன் ரெட்டி விமர்சனம்

நடிகர் விஜய் தேவரகொண்டா
நடிகை பூஜா ஜாவேரி
இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ரவிந்திரா
இசை சாய் கார்த்திக்
ஓளிப்பதிவு ஷ்யாம் கே நாயுடு

சிறிய அளவில் திருடி பிழைப்பு நடத்தி வரும் விஜய் தேவரகொண்டா, பெரியதாக ஒருமுறை திருடி செட்டிலாக வேண்டும் என்று திட்டமிடுகிறார். இதற்காக கோயிலில் ஒன்றை தேர்வு செய்து திருட சென்ற இடத்தில் பூஜா சவேரியை பார்த்து காதல் வயப்படுகிறார்.

விஜய்யை பார்க்கும் பூஜா, திருடன் என்று கத்த அங்கிருந்து தப்பித்து ஓடி ஒளிகிறார். அந்த இடத்தின் சொந்தக்காரர் விஜய் தேவரகொண்டாவை சக்திவாய்ந்த சாமியார் என நினைத்துக் கொண்டு அங்கேயே தங்க வைக்கிறார். வசதியான வாழ்க்கை கிடைக்க, விஜய்யும் அங்கேயே செட்டிலாகிவிட எண்ணுகிறார். சாமியார் என்ற முகமூடியுடன் பிரபலமாகும் விஜய்யை பார்க்க மக்கள் கூட்டம் வருகிறது.


ஆனால் விஜய் யார் என்பது தெரிந்த அந்த பகுதி ரவுடிகள், விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கின்றனர். விஜய் அவர்களிடம் இருந்து தப்பிக்க எண்ணும் போது, மீண்டும் பூஜாவை பார்க்க அங்கேயே இருந்துவிடுகிறார்.

ஒருகட்டத்தில் விஜய் – பூஜா இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர். தன்னை கரம்பிடிக்க வேண்டுமென்றால், விஜய் திருட்டுத்தனத்தை விட்டு நல்ல மனிதனாக திருந்தி வாழ வேண்டும் என்று வற்புறுத்துகிறார்.

கடைசியில், விஜய் நல்ல வழிக்கு திரும்பினாரா? விஜய் – பூஜா இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே அர்ஜுன் ரெட்டியின் மீதிப்பாதி.

விஜய் தேவரகொண்டாவின் ஆரம்ப காலத்தில் வெளியான படமாக இருந்தாலும், இதிலும் ரசிகர்களை கவரும்படியாகவே நடித்திருக்கிறார். பூஜா சவேரி அழகு தேவதையாக வந்து செல்கிறார். பல்லிரெட்டி பிருத்விராஜ், பிரபாகர், பிரகாஷ்ராஜ், ரகுபாபு எர்ரா, ஷக்கலக்க ஷங்கர், சுரேகா வாணி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

எம்.ஸ்ரீநிவாஸ் ரவீந்திரா இயக்கியிருக்கும் இந்த படம் காதல், காமெடி கலந்த படமாக உருவாகி இருக்கிறது. படம் ஓரளவுக்கு விறுவிறுப்பாக நகர்கிறது. ஆங்காங்கே திரைக்கதையில் தொய்வு ஏற்படும்படி இருக்கிறது.

சாய் கார்த்திக்கின் இசையும், ஷியாம் கே நாயுடுவின் ஒளிப்பதிவும் அர்ஜுன் ரெட்டிக்கு பலம் சேர்த்திருக்கின்றன.

மொத்தத்தில் `அர்ஜுன் ரெட்டி’ ஒரிஜினல் இல்லை.