விஜய் படத்தால் சிவகார்த்திகேயனுக்கு வந்த சிக்கல்.! சந்திக்கப்போகும் பெரிய குழப்பம்.!

ஒரே டைட்டில், இரு படங்களுக்கு வைப்பதும், பின் அது சர்ச்சையாவதும், திரையுலகில் பல வருடங்களாக அரங்கேறி வருகிறது.

பின் இதற்காக இரண்டு பட தரப்பில் இருந்தும் ஒரு பிரச்சனை உருவாகி, கடைசியில் ஏதானும் ஒரு படத்திற்கு குறிப்பிட்ட அந்த டைட்டில் கிடைக்கும்.

தற்போது எழுத்தாளர் ஆனந்த் அண்ணாமலை இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிக்கும் படத்திற்கு ‘ஹீரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக இன்று செய்தி வெளியானது.

இதே டைட்டில், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், பி.எஸ்.மித்ரன் இயக்கவுள்ள படத்திற்கும் ‘ஹீரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

ஒரே நேரத்தில் இரண்டு ஹீரோக்களின் படங்களுக்கு ‘ஹீரோ’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதால் இரு தரப்பு படக்குழுவினர் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘ஹீரோ’ படத்தில் அவருக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். ஆக்சன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.