விஜய் டிவி பிரியாங்காவின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது… குவியும் வாழ்த்துக்கள்

தமிழில் பிரபல தொகுப்பாளினிகளின் வரிசையில் டிடி, அர்ச்சனா, மா.க.பா போன்றோருக்கு அடுத்தபடியாக இருப்பவர் என்றால் அது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை கலகலப்பாக கொண்டு சேர்ப்பவர் என்றால் அது பிரியங்கா தான்.

இவரை யாரும் வெளியில் கண்டாலும் விஜய் டிவி பிரியங்கா என்று தான் கூப்பிடுவார்கள் என்று பல முறை கூறியுள்ளார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போதே அவர் அவ்வப்போது ஏதேனும் பாடல்களை அங்கே இருக்கும் பிரபல பாடகர்கள் முன்பு பாடி காண்பிப்பார். அப்படி பாடும் போது அவரை பல முறை கோ ஆங்கர் மா.க.ப கேலி செய்ததுண்டு.

https://twitter.com/Priyanka2804/status/1116604735702757377

ஆனால் பிரியாவோ நான் நிச்சயமாக திரையில் பாடுவேன் அது என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். தற்போது அவரின் அந்த ஆசை நிறைவேறியுள்ளது.

இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இன்று மாலை 4 மணிக்கு கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகும் தேவராட்டம் படத்தின் பாடலில் நான் பாடியுள்ளேன், அதற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த படத்தின் சிங்கிள் டிராக் மதுரைமக்களே பாடலை விஜய்சேதுபதி மாலை 4 மணிக்கு வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.