ரோட்டுக்கடையில் காமெடி நடிகருடன் சேர்ந்து தோசை சுடும் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ.!

தமிழ் சினிமாவில் இப்போது இருக்கும் திரைப்பிரபலங்களில் மிகவும் எதார்த்தமான நடிப்பை கொடுப்பவர் என்றால், அது விஜய் சேதுபதி தான், அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பால் அந்த கேரக்டராகவே வாழ்ந்துவிடுவார்.

இதன் காரணமாகவே அவருக்கு ரசிகரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது, நடிப்பு மட்டுமின்றி, வெளியில் எந்த ஒரு ரசிகரைப் பார்த்தாலும், அவர்களிடம் முகம் சுழிக்காமல் செல்பி எடுத்து கொள்வது, முத்தம் கொடுப்பது போன்றும் இருப்பார்.

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் சங்கத் தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்டு வருகின்றன. அங்கு விஜய் சேதுபதியும் காமெடி நடிகர் சூரியும் இணைந்து ரோட்டு கடையில் தோசை சுட்டுள்ளனர்.

மேலும் அதே கடையில் அவர்கள் உணவருந்தியும் உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது.

இதனை பார்த்த ரசிகர்களும் இது தான் எங்களுடைய எதார்த்தம் என கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
https://twitter.com/i/status/1114881369627226114