எனக்கு அந்த தேதி மிஸ் ஆக கூடாது..!! இயக்குனருக்கு கட்டளையிட்ட அஜித்..!!


வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து அஜித்துடன் நான்காவது முறையாக இயக்குநர் சிவா இணையவிருக்கிறார் என்ற தகவல் பல வாரங்களாகவே அடிபட்டு வந்தது.

இந்நிலையில், அந்த செய்தி தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.’விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்தப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு ‘விசுவாசம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி மாதம் துவங்குகிறது. தீபாவளியன்று படத்தை ரிலீஸ் செய்யவிருப்பதாக தயாரிப்பாளர் டி.தியாகராஜன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

வீரம், வேதாளம், விவேகம் படங்களைத் தொடர்ந்து தற்போது ‘விசுவாசம்’ என்று டைட்டில் வைத்திருப்பதன் மூலம் ஆங்கில எழுத்தான ‘V’யில் துவங்கும் பெயரை சூட்டும் இயக்குநர் சிவாவின் சென்ட்டிமெண்ட் இதிலும் தொடர்கிறது.வீரம் படத்தைப் போல் கிராமப் பின்னணியில் எடுக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், என்ன பண்ணுவீங்களோ தெரியாது நவம்பர் 1-ம் தேதி படம் ரிலிசாகனும். அந்த தேதி மிஸ் ஆக கூடாது என சிறுத்தை சிவாவிற்கு அன்புக்கட்டளை போட்டுள்ளார் அஜித்குமார். மேலும், அஜித்தின் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#