நம்ப ஓடணுமா இல்ல அத ஓட விடணுமா? மகனுடன் விஜய் சேதுபதி கலக்கும் ‘சிந்துபாத்’ டீசர்!


விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் புதிய படம் சிந்துபாத். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். `பண்ணையாரும் பத்மினியும்’ `சேதுபதி’ படங்களை இயக்கிய அருண்குமார் இந்தப் படத்தை இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜா படத்துக்கு இசையமைத்துள்ளார். விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

வாசன் மூவிஸ்’ கே புரடொக்சன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. `சிந்துபாத்’ திரைப்படம், காதல் கலந்த ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. விஜய்சேதுபதியின் பிறந்த நாளன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடபட்டது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷன் திரில்லராக உருவாகிவரும் `சிந்துபாத்’ விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.