திடீரென வீட்டில் தற்கொலை செய்துகொண்ட பிரபல இயக்குனர்- அதிர்ச்சியில் குடும்பம்

‘மீடூ’ பிரச்சனையில் சிக்கிய பிரபல இயக்குனர் ஆர்க்ய பாஸு, இந்த பிரச்சினையினால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்து வெளியே வர முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட் திரையுலகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ‘மீடூ’ அமைப்பு, மெல்ல மெல்ல தென்னிந்திய திரையுலகின் பக்கமும் வந்தது. முதலில் ‘மீடூ’ என பெயரிடமால் இந்த பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி.

பட வாய்ப்பு தருவதாக கூறி, பலர் தன்னை பயன்படுத்தி கொண்டு ஏமாற்றி விட்டதாக புகார் கொடுத்தார். இதில் தெலுங்கு முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தமிழில் பிரபலங்கள் பலரும் சிக்கினர்.

இவரை தொடர்ந்து ‘மீடூ’ மூலம் கவிஞர் வைரமுத்து மீது குற்றம் சாட்டினார் பாடகி சின்மயி. பின் வரிசையாக, பல நடிகைகள் மற்றும் வேலைக்கு செல்லும் சாதாரண பெண்கள் கூட தங்களுக்கு வெளியுலகில், மற்றும் அலுவலகங்களில் நடந்த பாலியல் தொந்தரவு குறித்து ‘மீ டூ’ வில் வெளியிட்டனர்.

அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ‘மீடூ’ பிரச்சனையில் சிக்கியவர் பிரபல இயக்குனர் ஆர்க்ய பாஸு. இந்த சம்பவத்திற்கு பின் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானார்.

படம் இயக்குவதில் அவரது கவனம் குறைந்தது, வீட்டை விட்டு வெளியே செல்வதை குறைத்து கொண்டார். இதனால் இவருடைய குடும்பத்தினர், மருத்துவர்கள் உதவியோடு கவுன்சிலிங் கொடுத்தனர்.

பின்னர், திரைப்படம் இயக்க வில்லை என்றாலும், திரையுலகை சேர்ந்த மற்ற வேளைகளில் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். ஆனால் அவர் முழுமையாக குணமாகாத நிலையில், திடீர் என அவருடைய அறையில் கடந்த வாரம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இயக்குநர் ஆர்க்ய பாஸு , தற்கொலைக்கு காரணம், மீடூ பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் என அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் திரையுலக பிரபலங்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.