மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் யார் யார்?

அமரர் கல்கியின் காலத்தால் அழியாத காவிய வரலாற்று நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதையை திரைப்படமாக்க எம்ஜிஆர், சிவாஜி, கமல் உள்பட பலர் முயற்சித்த நிலையில் தற்போது மணிரத்னம் அந்த நாவலை திரைப்படமாக்கவுள்ளார் என்று வெளிவந்த செய்தியயை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த கதையின் நாயகன் வந்தியத்தேவன் மற்றும் ராஜராஜசோழன், பெரிய பழுவேட்டவர், ஆழ்வார்க்கடியன், சேந்தன் அமுதன், ஆதித்த கரிகாலன் போன்ற கேரக்டர்களுக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய சவால். அதேபோல் குந்தவை, வானதி, நந்தினி ஆகிய கேரக்டர்களுக்கு ஏற்ற நடிகைகளை தேர்வு செய்ய முடியுமா? என்பதே பெரிய கேள்விக்குறி

இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் விக்ரம், கார்த்தி மற்றும் ஜெயம் ரவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதில் யார் யார் என்ன கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

முன்னதாக இந்த படத்தில் சிம்பு, விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது இருவரும் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.