வேறு தொலைக்காட்சிக்கு மாறிய நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் நடிகை சரண்யா.! என்ன தொடர் தெரியுமா.!

சின்னத்திரையில் பிரபல தொலைகாட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் சரண்யா. இவர் தற்போது சன் டிவிக்கு தாவியுள்ளார்.

ஏற்கனவே சின்னத்திரையில் சித்திரபாவை, நீலா மாலா உள்ளிட்ட சீரியல்களை இயக்கி இருந்தவர் செல்வா. அதுமட்டுமில்லாமல் இவர் தற்போது வரை 27 படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது இந்த செல்வா சன் டிவியில் புதியதாக சீரியல் ஒன்றை இயக்க உள்ளார். இதில் ஹீரோவாக தெய்வமகள் பிரகாஷ் நடிக்க உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பிரகாஷுக்கு ஜோடியாக நெஞ்சம் மறப்பதில்லை சரண்யா தான் நடிக்க உள்ளாராம். தெய்வ மகள் சீரியலுக்கு பிறகு கிருஷ்ணா எந்த சீரியலிலும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.