“ஆடம்பர திருமணம் அமைதியை குலைக்கும்” – திருமணம் விமர்சனம்.!

சேரனின் இயக்கி நடித்துள்ள திரைப்படம் திருமணம். இப்படத்தில் சேரனுடன் சேர்ந்து உமாபதி, காவ்யா சுரேஷ், எம்.எஸ் பாஸ்கர், சீமா, சுகன்யா, தம்பி ராமையா என பலர் நடித்துள்ளனர். பிரேம் நாத் சிதம்பரம் சேரனின் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரித்து ரிலீஸ் செய்துள்ளார்.

படத்தின் கதைக்களம் :

சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த சேரனின் தங்கையான காவியாவும் ஜமீன் குடும்பத்தை சேர்ந்த சுகன்யாவின் தம்பி உமாபதி ராமையாவும் முகநூல் மூலமாக காதல் வயப்படுகின்றனர்.

இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்து விடுகின்றனர். அதன் பின்னர் இரு குடும்பத்துக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள் என்னென்ன? இறுதியில் திருமணம் எப்படி நடந்தது என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

நடிகர் நடிகைகள் நடிப்பு :

சேரன், உமாபதி, தம்பி ராமையா, சுகன்யா, காவ்யா என இந்த படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். நடித்துள்ளார்கள் என்பதை விட கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்கள் என்று கூறலாம்.

தொழில் நுட்பம் :

இசை :

சித்தார்த் விபின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்துடன் சேர்ந்து பின்னணி இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. பாடல்களில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

ஒளிப்பதிவு :

ராஜேஷ் யாதவ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு காட்சியையும் நம் வீட்டில் நடைபெறுவது போலவே உணர செய்துள்ளார்.

இயக்கம் :

சேரன் இந்த படத்தை மிகவும் எதார்த்தமாக கொண்டு சென்றுள்ளார். தங்களது வீட்டில் திருமணம் என்றால் என்னவெல்லாம் நடக்கும். இன்றைய காலகட்டத்தில் திருமண நிகழ்ச்சிகளில் எதையெல்லாம் மாற்றலாம் என்பதை ஆணித்தனமாகவும் ஆழமாகவும் கூறியுள்ளார்.

சமூகத்திற்கு தேவையான தரமான படத்தை கொடுக்க சேரனுக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர் பிரேம்நாத் சிதம்பரத்திற்கும் அந்த தயாரிப்பு நிறுவனத்தின் CEO-வான வெள்ளை சேது அவர்களுக்கும் மிக பெரிய பாராட்டுகள்.

தம்பஸ் அப் :

1. ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு
2. திருமணத்தின் செய்ய வேண்டிய திருத்தங்கள் என கூறிய கருத்துகள்
3. எதார்த்தமான திரைக்கதை


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.