ஜிம் மாஸ்டருடன் தொடர்பு? – ஆதாரத்துடன் நித்யாவின் முகத்திரையை கிழித்த தாடி பாலாஜி

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர், விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வருபவர் தாடி பாலாஜி. இவருக்கும் இவருடைய மனைவி நித்யாவுக்கும் இடையே ஏற்கனவே பல பிரச்சனைகள் சென்று கொண்டிருந்தன.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் பின்னர் இருவரும் சேர்ந்து வாழ இருப்பதாக அறிவித்திருந்தனர்.

ஆனால் தற்போது இவர்கள் இருவருக்குள் மீண்டும் முட்டி கொண்டது. சமீபத்தில் நித்யா தாடி பாலாஜி மீது போலீஸ் புகார் கொடுத்திருந்தார். அதற்கான விசாரணைகள் எல்லாம் நடந்து வந்தன.

இந்நிலையில் இன்று தாடி பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். மேலும் நித்யாவிற்கும் ஜிம் மாஸ்டருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறி சில ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்த ஜிம் மாஸ்டரும் எஸ். ஐ மனோஜ் என்பவரும் சேர்ந்து என்னுடைய குடும்பத்தையே நாசமாக்கி விட்டார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.