விஜய்க்கு ஜோடியாக நடிக்க 15 வருடங்கள் காத்திருக்கும் ‘உலக அழகி’..!! யாருனு தெரியுமா..?


பாலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார். ‘மிஸ் வேர்ல்டு 2000’ பட்டம் பெற்ற இவருக்குத் தற்போது 35 வயதாகிறது.

விஜய் ஜோடியாக 2002-ம் ஆண்டு வெளியான ‘தமிழன்’ படத்தில் அறிமுகமானார் பிரியங்கா சோப்ரா. இவர் ஹீரோயினாக அறிமுகமான படம் இது. அதன்பிறகு ஹிந்திப் படங்களில் கவனம் செலுத்தியவர், தமிழில் நடிக்கவேயில்லை.இந்நிலையில், ட்விட்டரில் இரண்டு கோடி ஃபாலோயர்களைக் கடந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. இந்தியாவில் 2 கோடி ஃபாலோயர்களைக் கொண்டுள்ள 10வது பிரபலம் இவர். இதையொட்டி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அதில், சுவாரசியமான சில கேள்வி – பதில்களைப் பார்க்கலாம்.

கேள்வி: எந்த பெண் பாப் பாடகருடன் இணைந்து பணியாற்ற விரும்புகீறீர்கள்?

பதில்: ரிகன்னாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். அவர் மிகச்சிறந்தவர்.

கேள்வி: 2018ஆம் ஆண்டில் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: நான் இன்னும் வலிமையாக இருக்க வேண்டும்.


கேள்வி: வருண் தவானைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள்?

பதில்: பரபரப்பானவர்.

கேள்வி: ‘தமிழன்’ படத்துக்குப் பிறகு மறுபடியும் விஜய்யுடன் இணைந்து நடிப்பீர்களா?

பதில்: விஜய்யுடன் இணைந்து நடிக்க “ஐ ஆம் வெயிட்டிங்” . ஏனெனில், நான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகை.

கேள்வி: உங்கள் பிட்னெஸ் ரகசியம்?

பதில்: உங்களுக்குப் பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் ஜிம்முக்குச் செல்லுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#