ஜீ தமிழ் சீரியலில் வரும் சரவணன் மீனாட்சி நடிகை ரட்சிதா! வெளியான புகைப்படம்

விஜய்டிவியில் தமிழில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரட்சிதா அந்த சீரியலுக்கு பின் எந்த ஒரு சீரியலிலும் நடிக்காமல் இருந்தார்.

ஆனால் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். இதனால் அவரது ரசிகர்கள் பலரும், அடுத்து என்ன சீரியலா, படமா என்று தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே வந்தனர்.

இதனால் ஒரு முறை என்னுடைய அடுத்த புராஜக்ட் ரெடியாகிவிட்டது, என்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால் அது எந்த சீரியல், விஜய்டியிலா அல்லது ஜீ தமிழிலா என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் ரட்சிதா ஜீ தமிழ் சீரியலில் நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

அது தொடர்பான புகைப்படத்தை பதிவேற்றம் செய்து, யாரேனும் இது நிகழ்ச்சியா? அல்லது சீரியலா என்று கண்டுடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.