செல்பி எடுக்கும் போது போனை தட்டிவிடும் சிவகுமார்- சர்ச்சை குறித்து முதன்முதலாக பேசிய கார்த்தி

கடந்த சில மாதங்களுக்கு முன், கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட பழம்பெரும் நடிகர் சிவகுமார், செல்பி எடுக்க அவரை ஆசையாக நெருங்கிய இளைஞர் ஒருவரின் செல்போனை தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலரும், சிவகுமாரின் இந்த செயலை கடுமையாக விமர்சனம் செய்ததை தொடர்ந்து, வீடியோ ஒன்றை வெளியிட்டு மன்னிப்பு கோரினார். மேலும் அந்த இளைஞருக்கு புது செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமார், அங்கு செல்பி வீடியோ எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை தட்டிவிட்டார்.இந்த சம்பவமும் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து, நடிகர் கார்த்தி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் ‘கையில் போன் இருந்தால் யாருடைய முகத்தின் முன்பும் போனை நீட்டி செல்பி எடுப்பது என்பது அநாகரீகமானது. செல்பியோ புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நபரிடம் அனுமதி கேட்டு எடுக்க வேண்டும் என்ற நாகரீகத்தை நாம் இன்னும் யாருக்கும் கற்றுத்தரவில்லை என்பது ஒரு சோகமான விஷயம் என தெரிவித்துள்ளார்.

மேலும் இதுவொரு சாதாரண விஷயம். இந்த விஷயத்திற்காக மீடூ அளவுக்கு விமர்சனம் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருப்பினும் அப்பா இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாம் என்பதையும் கார்த்தி தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.