இதுக்கூட தெரியாம படம் எடுத்துருக்காங்க.. பீஸ்ட் படத்தை திட்டித்தீர்த்த அப்படத்தில் நடித்த நடிகர்

பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், விடிவி கணேஷ், மலையாள நடிகர் Shine Tom Chacko ஆகியோர் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இப்படம், மாபெரும் தோல்வியை சந்தித்தது. மேலும், விமர்சனங்களில் சிக்கியது.

திட்டித்தீர்த்த நடிகர்
இந்நிலையில், இப்படத்தில் தீவீரவாதியாக நடித்திருந்த நடிகர் Shine Tom Chacko சமீபத்திய பேட்டியில், பீஸ்ட் படத்தை திட்டித்தீர்த்து பேசியுள்ளார்.

அதிலும் ” தமிழ் சினிமாவில் எனக்கு பீஸ்ட் படம் ஒரு நல்ல என்ட்ரி கிடையாது. என்னை தூக்கி செல்லும் பொழுது விஜய் முகத்தில் ஒரு ரியாக்ஷன் இல்லை.

ஒரு வெயிட்டான பொருளை தூக்கும் பொழுது, முகத்தில் துளிகூட ரியாக்ஷ்ன் இல்லை. டர்ரரிசம் பற்றி தெரியாம படம் எடுத்துருக்காங்க. இப்படம் எனக்கு ஒரு ஏமாற்றம் தான் ” என்று கூறியுள்ளார்.


பீஸ்ட் படத்தில் நடித்த நடிகரே, அப்படத்தை இப்படி திட்டித்தீர்த்துள்ளார் என்று பலரும், சமுக வலைத்தளத்தில் பேசி வருகிறார்கள்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!