ஜாங்கிரி மதுமிதாவுக்கு கல்யாணம் – வைரலாகும் மாப்பிள்ளை புகைப்படம்.!

ஜாங்கிரி மதுமிதாவுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது. மேலும் தன்னுடைய வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் உருவாகி இருந்த ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் மூலமாக அறிமுகமாகி இருந்தவர் மதுமிதா.

இந்த படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்து பிரபலமாகியதை அடுத்து பல படங்களில் காமெடி ரோலில் கலக்க தொடங்கினார்.

சமீபத்தில் வெளியான தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் கூட ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர் பிரபல பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ளார்.

என்னுடைய தாய் மாமா பையன் மோசஸ் ஜோயல் என்பவரை தான் திருமணம் செய்து கொள்ள உள்ளேன். அவர் குறும்பட இயக்குனராகவும் பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குநரகாவும் பணியாற்றி வருகிறார்.

அவை பார்த்து தான் நான் சினிமாவிற்கே நடிக்க வந்தேன். தற்போது அவரே என்னுடைய வாழ்க்கை துணையாகவும் உள்ளார் என கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.