மீண்டும் ஒரே டீவீட்டால் அஜித் ரசிகர்களை சீண்டிய கார்த்திக் சுப்புராஜ்

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் கார்த்திக் சுப்புராஜ். இவர் இறுதியாக தலைவர் ரஜினிகாந்தை வைத்து பேட்ட திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

பொங்கலுக்கு வெளியான இந்த படத்துடன் தல அஜித்தின் விஸ்வாசம் திரைப்படமும் வெளியானது. தமிழகத்தை பொறுத்தவரை பேட்டை திரைப்படத்தை விட விஸ்வாசம் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்திருந்தது.

மேலும் இந்த இரண்டு படக்குழுவுமே படத்தின் ட்ரைலரையே ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வது போல வெளியிட்டு இருந்தது எல்லாம் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் தோனியின் பிறந்த நாளுக்காக ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

https://twitter.com/karthiksubbaraj/status/1147807192990531585

அந்த டீவீட்டில் தல தோனி என குறிப்பிட்டு இருப்பது அஜித் ரசிகர்களை சீண்டும் விதமாக இருப்பதாக கூறி கார்த்திக் சுப்பாராஜை மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே ஒரு முறை தல என்ற பெயரில் கார்த்திக் சுப்புராஜுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே இப்படியான ஒரு மோதல் ஏற்பட்டு இருந்தது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.