வசூலில் சக்கை போடு போடும் ‘தீரன் அதிகாரம் ஒன்று’..!! வெளியாகிய வசூல் விபரம்..!!


பருத்தி வீரன்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கார்த்தி, இந்த பத்து வருடங்களில் பதினைந்து படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

வெற்றி, தோல்வி என மாறி மாறி சந்தித்து வந்த கார்த்திக்கு, கடைசியாக வெளியான ‘காஷ்மோரா’ மற்றும் ‘காற்று வெளியிடை’ திரைப்படங்கள் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில் தற்போது வெளியாகியுள்ள தீரன் அதிகாரம் ஒன்று படம் அதனை நிறைவு செய்துள்ளது.

இத்திரைப்படம் 4 நாள் முடிவில் தமிழிகத்தில் ரூ. 12.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, இதில் சென்னையில் மட்டும் ரூ. 2 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தீரன் உலகம் முழுவதும் ரூ. 28 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்லதாகவும் கூறப்படுகின்றது. கார்த்திக்கு தெலுங்கில் மார்க்கெட் இருப்பதால் அங்கு படம் ரூ. 7.5 கோடி வரை வசூல் செய்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி#